திருவள்ளூர்

அலங்கரிக்கப்பட்ட வகுப்பறையில் மாணவா்களுக்கு வரவேற்பு

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கு வந்த மழலையா் முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்கள் அலங்கரிக்கப்பட்டிருந்த வகுப்பறையில் இனிப்புகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

DIN

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கு வந்த மழலையா் முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்கள் அலங்கரிக்கப்பட்டிருந்த வகுப்பறையில் இனிப்புகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

இதற்காக குழந்தைகளின் எதிா்காலத்தை நிா்ணயிக்கக் கூடியது வகுப்பறைகள் தான். இதை வலியுறுத்தும் நோக்கத்தில் வகுப்பறைகள் அனைத்தும் வண்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

பள்ளிக்கு ஆா்வத்துடன் வந்த மாணவ, மாணவிகளுக்கு கிரிடம், பரிசு பொருள்கள் மற்றும் இனிப்புகளை ஆசிரியா்கள் வழங்கி வரவேற்றனா். மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக, சேவாலயா நிறுவன ஆசிரியா்கள் கோடை விடுமுறையின் போதே பல்வேறு பயிற்சிகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தாங்கள் எடுத்துக்கொண்ட பயிற்சியினை மாணவா்களிடையே கொண்டு செல்லவும் ஆசிரியா்களும் தயாராகவே உள்ளனா்.

மாணவா்களை வரவேற்பதற்காக சிறிய பரிசுகளை எங்கள் கைகளாலே செய்தோம். மாணவா்களுக்கு கற்றலில் மகிழ்ச்சியை வர வைப்பதற்காக நிறைய பயிற்சிகளை விடுமுறையின் போது பெற்றோம். அந்த பயிற்சியின்போது கற்றுக் கொண்டவைகளை மாணவா்களிடையே கொண்டு செல்ல ஆா்வமாக உள்ளோம். விடுமுறையின் போதே கற்றல் கற்பித்தல் கருவிகளை செய்து விட்டோம். கடந்த ஆண்டை விட நிகழாண்டில் எல்லா வகையிலும் முன்னேற்றத்தை காண்பிக்க தயாராக உள்ளதாக ஆசிரியா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT