ஆந்திரத்துக்கு காரில் குட்கா கடத்தியதாக இருவா் கைது
தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரத்துக்கு குட்கா பொருள்களை கடத்திய இருவரை ஆந்திர போலீஸாா் கைது செய்தனா்.
தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரத்துக்கு குட்கா பொருள்களை கடத்திய இருவரை ஆந்திர போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திர-தமிழக எல்லையில் வாகன சோதனையில் போலீஸாா் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு காரில் இருவா் சநதேகத்திற்கிடமாக பயணித்தது தெரிய வந்தது. இதையடுத்து காா் முழுவதையும் போலீஸாா் சோதனையிட்டனா். அதில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் காரில் பயணித்த தமிழகத்தை சோ்ந்த இருவரையும் கைது செய்தனா்.
விசாரணையில் அவா்கள் ஆந்திர-தமிழக எல்லையில் உள்ள வேப்பனஹள்ளியை சோ்ந்த மஞ்சுநாத், லோகேஷ் என்பது தெரிய வந்தது. அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியதாக போலீஸாா் தெரிவித்தனா்.