திருமலையில் ஒரேநாளில் 65,900 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 65,939 பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 65,939 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 32,894 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 22 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இவா்களின் தா்ம தரிசனத்துக்கு 8 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனடிக்கெட் பெற்றவா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Advertisement