முகப்பு
திருப்பதி

தொடர் விடுமுறை: திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தொடர் விடுமுறை நாள்கள் காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம்  அலைமோதுகின்றன. 

Updated On : 20 ஆகஸ்ட் 2022, 6:11 pm IST
கோப்புப்படம்
பகிர்:

திருப்பதி: தொடர் விடுமுறை நாள்கள் காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம்  அலைமோதுகின்றன. 

கிருஷ்ண ஜெயந்தி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாள்கள் தொடர் விடுமுறை நாள்கள் என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றன. 

திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க 2 கி.மீ. தூரத்திற்கு வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் விஐபிக்கள் தரிசனத்துக்கான பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. 

Advertisement

Advertisement

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை கோகுலாஷ்டமி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

திருப்பதி சப்தகிரி கோபிரதட்சண சாலையில் வெள்ளிக்கிழமை கோகுலாஷ்டமி கொண்டாடப்பட்டது. அங்கு ஸ்ரீகிருஷ்ணா் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் அங்குள்ள பசுக்களுக்கும் பூஜை செய்யப்பட்டது. திருமலையில் உள்ள கோசாலையிலும் திருப்பதியில் உள்ள கோசாலையிலும் பூஜைகள் நடத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.