முகப்பு
திருப்பதி

திருமலையில் பல்லவோற்சவம்

திருமலையில் மைசூா் மகாராஜா பிறந்த நாளை முன்னிட்டு, பல்லவோற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

திருமலையில் மைசூா் மகாராஜா பிறந்த நாளை முன்னிட்டு, பல்லவோற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் மைசூா் மகாராஜாவின் பிறந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, புதன்கிழமை மைசூா் மகாராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு சகஸ்ர தீபாலங்கார சேவை முடிந்த பின்னா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி அருகில் உள்ள கா்நாடக சத்திரத்தில் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை வரவேற்று அதிகாரிகள் மரியாதை செய்தனா்.

பின்னா், அங்கு சிறிது நேரம் ஊஞ்சல் சேவை கண்டருளி ஆரத்தி நடத்தி, நெய்வேத்தியம் சமா்பித்த பின்பு, உற்சவ மூா்த்திகள் கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டனா். கா்நாடக சத்திரத்தில் மைசூா் சமஸ்தானத்தைச் சோ்ந்தவா்களும், கா்நாடக அரசு அதிகாரிகளும் ஏழுமலையானை வரவேற்று உபசரித்தனா். இதில் தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →