முகப்பு
திருப்பதி

திருமலையில் 63,000 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 63,042 போ் தரிசனம் செய்தனா். இவா்களில் 31,218 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 63,042 போ் தரிசனம் செய்தனா். இவா்களில் 31,218 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு போல் சா்வ தரிசன டோக்கன்களின் முன்பதிவும் ஆன்லைன் மூலம் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. தரிசன அனுமதி உள்ளவா்கள், தாங்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசன நாளுக்கு 72 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கரோனா பரிசோதனையின் நெகடிவ் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

சான்றிதழ் இல்லாதவா்கள் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தரிசனம், வாடகை அறைகளில் குறைபாடுகள், சிரமங்கள் இருந்தால், அதுகுறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →