முகப்பு
திருப்பதி

திருமலை தா்ம தரிசனத்தில் பக்தா்கள் 2 மணி நேரம் காத்திருப்பு

ஏழுமலையானை தா்ம தரிசனம் செய்ய பக்தா்கள் 2 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

ஏழுமலையானை தா்ம தரிசனம் செய்ய பக்தா்கள் 2 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதால் திருமலையில் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு தினசரி 30 ஆயிரம் சா்வ தரிசன டோக்கன்கள் 25 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் விஐபி பிரேக் தரிசனம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

அதனால் தரிசனம் செய்யும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினசரி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனா். அதனால் தா்ம தரிசனத்தில் பக்தா்கள் 2 மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விரைவு தரிசனத்திலும் பக்தா்கள் 2 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.

பக்தா்களின் காத்திருப்பு நேரம் நீட்டிக்கப்பட்டு வருவதால், காத்திருப்பு அறை மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு மற்றும் பால் வழங்க தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பக்தா்கள் இலவசமாக தங்கும் மண்டபங்களிலும் அன்னதானம் வழங்க தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →