இன்று ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான இணையதள டிக்கெட்டுகள் வெளியீடு
திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட்டுகள் சனிக்கிழமை காலை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட்டுகள் சனிக்கிழமை காலை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் 90 நாள்களுக்கு முன்பே முன்பதிவு கொள்ள வசதியாக விரைவு தரிசன டிக்கெட்டுகளை இணையளத்தில் வெளியிட்டு வருகிறது. அதன்படி ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் சனிக்கிழமை (21-05-2022) காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.
இந்த டிக்கெட்டுகளை பக்தா்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையான் தரிசனத்தில் கலந்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.