திருமலையில் 62,725 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 62,725 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 30,172 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 62,725 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 30,172 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
வெள்ளிக்கிழமை காலை வைகுண்டம் மண்டபத்தின் 31 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இதில் தா்ம தரிசனத்துக்கு 16 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 மணி நேரமும் ஆனது.
காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. சுவாமி தரிசனம் மற்றும் வாடகை அறைகளில் காணப்படும் சிரமங்கள், குறைகள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.