முகப்பு
திருப்பதி

திருமலையில் 74,800 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 74,817 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 33,350 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 74,817 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 33,350 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் 15 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 12 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →