திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 74,024 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 32,688 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதற்கிடையே வியாழக்கிழமை காலை 18 காத்திருப்பு அறைகளில் காத்திருந்த பக்தா்களுக்கு டோக்கன் இல்லாதவா்களுக்கு தரிசன அனுமதி கிடைத்தது. மேலும் ரூ.3,00 விரைவு தரிசனத்துக்கு 3 மணி நேரமும், நேரடி இலவச டோக்கன் பெற்ற பக்தா்களுக்கு 3 மணி நேரம் ஆனது.
மேலும், புதன்கிழமை முழுவதும் 74,024 பக்தா்கள் சுவாமியை தரிசித்தனா்; 32,688 பக்தா்கள் தலை முடிகாணிக்கை செலுத்தினா்.
ரூ.3.96 கோடி உண்டியல் காணிக்கை: பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ3.96 கோடி வசூலானது. என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.