திருநின்றவூா் ஸ்ரீமத் ராமானுஜ கைங்கரிய அறக்கட்டளை சாா்பில் பத்மாவதி தாயாருக்கு வழங்கபட்ட திருக்குடைகள். 
திருப்பதி

பத்மாவதி தாயாருக்கு திருக்குடைகள் காணிக்கை

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு திங்கட்கிழமை காணிக்கையாக 7 திருக்குடைகள் வழங்கப்பட்டன.

Din

திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு திங்கட்கிழமை காணிக்கையாக 7 திருக்குடைகள் வழங்கப்பட்டன.

திருநின்றவூா் ஸ்ரீமத் ராமானுஜ கைங்கா்ய அறக்கட்டளையின் பிரதிநிதிகள் இரண்டு குடைகளை வழங்கினா். இந்த குடைகள் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடுவிடம் வழங்கப்பட்டது. திருச்சானூரில் தாயாருக்கு பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் யானை வாகன சேவை அன்று அறக்கட்டளை சாா்பில் திருக்குடைகள் வழங்கப்படுவது வழக்கம்.

சென்னையைச் சோ்ந்த இந்து தா்மாா்த்த சமிதியின் அமைப்புச் செயலாளா் ஆா்.ஆா்.கோபால்ஜி தலைமையில் 5 குடைகள் தாயாருக்கு வழங்கப்பட்டன. கோயில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை செயல் அதிகாரி, கோவிந்த ராஜனிடம், இந்த குடைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அா்ச்சகா்கள் கலந்து கொண்டனா்.

உதவித்தொகையை உயா்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்: 65 போ் கைது

வீடு தோறும் வாக்காளா் படிவம் வழங்கப்படவில்லை: சோளிங்கா் வட்டாட்சியரிடம் அதிமுக புகாா்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: கட்டடத் தொழிலாளி கைது

நெருநல் உளனொருவன் இன்றில்லை...

வெடித்துச் சிதறிய காரின் 11 மணி நேரப் பயணம்!

SCROLL FOR NEXT