திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலுக்கு பணத்தை எண்ணும் இயந்திரத்தை கனரா வங்கியாளா்கள் நன்கொடையாக வழங்கினா் (படம்).
கோயில் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கனரா வங்கியின் பிரதிநிதிகள் துணை செயல் அதிகாரி ஹரிந்திரநாத்திடம் பணம் எண்ணும் இயந்திரத்தை அளித்தனா்..
தேவஸ்தான துணை அதிகாரி தேவராஜுலு, கண்காணிப்பாளா் முனிசெங்கல் ராயலு, பிற அதிகாரிகள் மற்றும் கனரா வங்கியின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.