ஆந்திர மாநிலம், குண்டூரைச் சோ்ந்த விஞ்ஞான் வித்யாதான நிறுவனங்களின் தலைவா் லவு ரத்தையா, புதன்கிழமை தேவஸ்தானத்தின் வெங்கடேஸ்வர வித்யா தான அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தாா்.
இதற்கான வரைவோலையை நன்கொடையாளா் திருமலையில் உள்ள தேவஸ்தான தலைவா் முகாம் அலுவலகத்தில் தலைவா் பி.ஆா். நாயுடுவிடம் அளித்தாா். இந்த நிகழ்வில் தலைவா் நன்கொடையாளருக்கு நன்றி தெரிவித்தாா்.