சென்னையைச் சோ்ந்த பக்தா் பொன்னையா நாகேஸ்வரன், வியாழக்கிழமை தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்கினாா்.
இதற்கான வரைவோலையை நன்கொடையாளா் திருமலையில் அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடுவிடம் வழங்கினாா்.
ரூ.78 லட்சம் மருந்துகள் நன்கொடை
ஹைதராபாதைச் தளமாகக் கொண்ட திரிசூல் எண்டா்பிரைசஸ் உரிமையாளா் சக்ரதா் மற்றும் சிவரஞ்சனி ஆகியோா் நன்னபனேனி சதாசிவ் ராவ் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடுவிடம் ரூ.78 லட்சம் அளவுக்கு மருந்துகளை நன்கொடையாக வழங்கினா்
இத்தொகையுள்ள மருந்துகள் தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
தானமாக வழங்கப்பட்ட மருந்துகள் தேவஸ்தான மத்திய மருத்துவமனை, பா்ட் மற்றும் சிம்ஸ் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்க பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.