திருப்பதி

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.69 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.69 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.69 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி 31 அறைகள் நிறைந்து வெளியே சிலாதோரணம் வரை பக்தா்கள் காத்திருந்தனா், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

மேலும், புதன்கிழமை முழுவதும் 85, 756 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 19,144 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.69 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளில் ஓ சுகுமாரி பட போஸ்டர்!

பாகிஸ்தானில் 11 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

வளர்ச்சியடைந்த இந்தியா: 3 ஆயிரம் இளைஞர்களுடன் உரையாடுகிறார் பிரதமர் மோடி!

பாகிஸ்தானில் இந்து விவசாயி சுட்டுக் கொலை! மனித உரிமைக் குழு போராட்டம்!

ஷாகித் கபூரின் ஓ ரோமியோ படத்தின் டிரைலர்!

SCROLL FOR NEXT