சென்னையைச் சோ்ந்த தாரா லாஜிஸ்டிக்ஸ் புதன்கிழமை தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வர வித்யாதான அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சத்தை நன்கொடையாக வழங்கியது.
இதற்காக, நிறுவனத்தின் பிரதிநிதிகள் திருமலையில் உள்ள தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி முகாம் அலுவலகத்தில் தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி, கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் நன்கொடைக்கான வரைவோலையை வழங்கினா்.