திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில்பொது முடக்கத்தை மீறியதாக 312 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கத்தை மீறியதாக 507 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 312 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கத்தை மீறியதாக 507 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 312 போ் கைது செய்யப்பட்டனா்.

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வுகளற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

அதன்படி, மாதத்தின் 4-ஆவது பொது முடக்க தினமான 26-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் தடையை மீறி இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்ததாக 507 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 312 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனா். இவா்களிடம் இருந்து 469 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT