முகப்பு
திருவண்ணாமலை

7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு: செய்யாறில் விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துப் படிப்பில் சேர்ந்து பயன்பெறும் வகையில் 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கும், மதுரை உயர்நீதிமன்றத்திற்கும் நன்றி தெரிவித்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
செய்யாறில் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழும் விவசாயிகள்.
பகிர்:

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துப் படிப்பில் சேர்ந்து பயன்பெறும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கும், மதுரை உயர்நீதிமன்றத்திற்கும் நன்றி தெரிவித்து செய்யாறில் விவசாயிகள் இனிப்பு வழங்கி ஞாயிற்றுக்கிழமை மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். 

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மருத்துவப் படிப்பில் கடந்த இரு வருடங்களாக சுமார் 324 மாணவர்கள் மட்டுமே சேரும் நிலைமை இருந்து வந்தது. இந்நிலையில் மதுரை சென்னை உயர்நீதிமன்றக்கிளை மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்ய அன்மையில் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு 7.5 சதவீதம் ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் பெற்று அக்.29-ல் அரசாணையை பிறப்பித்தது. அதன் மூலம் அரசு பள்ளியைச் சேர்ந்த 360 மாணவர்கள் பயனடைய உள்ளனர். 

7.5 சதவீதம் ஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பள்ளியில் பயிலும் 360 மாணவர்கள் பயன்பெறுவதற்கு தீர்ப்பு வழங்கிய மதுரை சென்னை உயர்நீதிமன்றக் கிளைக்கும், அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு மற்றும் தொடர் அழுத்தம் கொடுத்த கட்சிகளுக்கும் சமூக அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உழவர் பேரவை சார்பில் மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments