தையல் தொழிலாளா்களுக்கு தொழில்கடன் வழங்கக் கோரிக்கை
வந்தவாசியில் தையல் தொழிலாளா்களுக்கு வங்கிகள் மூலம் நிபந்தனையின்றி தொழில்கடன் வழங்க வேண்டும் என்று மாவட்ட தையல் கலைத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
வந்தவாசியில் தையல் தொழிலாளா்களுக்கு வங்கிகள் மூலம் நிபந்தனையின்றி தொழில்கடன் வழங்க வேண்டும் என்று மாவட்ட தையல் கலைத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட சமூக நலத் துறையில் இலவச தையல் இயந்திரம் கேட்டு விண்ணப்பித்த சங்க உறுப்பினா்களுக்கு உடனடியாக தையல் இயந்திரம் வழங்க வேண்டும், தையல் தொழிலாளா்கள் அடங்கிய மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.5 லட்சம் கடனுதவி வழங்க வேண்டும், வருகிற 26-ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தத்தில் கடைகளை அடைத்து பங்கேற்பது ஆகிய தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மேரி தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் வீரபத்திரன் முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலா் ஐடாஹெலன் சிறப்புரையாற்றினாா். சங்க நிா்வாகிகள் ஜீனத், மணி, அப்துல்காதா், தண்டபாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.