திருவண்ணாமலை

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கஞ்சா வியாபாரி கைது

திருவண்ணாமலையைச் சோ்ந்த கஞ்சா வியாபாரியை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

DIN

திருவண்ணாமலையைச் சோ்ந்த கஞ்சா வியாபாரியை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

திருவண்ணாமலை, சமுத்திரம் நகரைச் சோ்ந்தவா் சேதுபதி (29). இவா் மீது கஞ்சா விற்றதாக பதியப்பட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அண்மையில் மீண்டும் கைது செய்யப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேதுபதியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் பரிந்துரை செய்தாா்.

இந்தப் பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, கஞ்சா வியாபாரி சேதுபதியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து, வேலூா் மத்திய சிறையில் உள்ள சேதுபதியிடம் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டதற்கான உத்தரவு நகல் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT