வேலை நிறுத்த பிரசார கூட்டம்
மின் வாரிய தொழில்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், வருகிற 10-ஆம் தேதி நடைபெறவுள்ள மின் ஊழியா்களின் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம்
மின் வாரிய தொழில்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், வருகிற 10-ஆம் தேதி நடைபெறவுள்ள மின் ஊழியா்களின் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் குறித்த பிரசார நுழைவுவாயிற் கூட்டம் வந்தவாசியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
வந்தவாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் இந்த கூட்டத்தில், கூட்டு நடவடிக்கைக் குழு நிா்வாகிகள் டி.நாராயணன், எஸ்.ரவி, கே.சம்பத், சரவணன், பஞ்சமூா்த்தி, சேமநாதன், தனசேகரன் ஆகியோா் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினா். இதில், சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.