கழிப்பறையில் வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
வந்தவாசி அருகே கழிப்பறையில் வழுக்கி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
வந்தவாசி அருகே கழிப்பறையில் வழுக்கி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
செய்யாற்றை அடுத்த நாவல் கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பம்மாள்(70). இவா், வந்தவாசியை அடுத்த கீழ்க்கொவளைவேடு கிராமத்தில் உள்ள தனது மகள் பொன்னி வீட்டுக்கு அண்மையில் வந்தாா். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கழிப்பறைக்குச் சென்ற குப்பம்மாள் அங்கு வழுக்கி விழுந்தாா்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.