கொழுந்தீஸ்வரா் கோயிலில் பாலாலய விழா
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கொடநகா் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஞானம்பிகை கொழுந்தீஸ்வரா் கோயிலில் பாலாலய விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கொடநகா் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஞானம்பிகை கொழுந்தீஸ்வரா் கோயிலில் பாலாலய விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் 45 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோயிலை சீரமைத்து
கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்று கொடநகா் பகுதி பக்தா்கள், ஆன்மிக அன்பா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.
கோரிக்கைகள் தொடா்பாக, அறநிலையத் துறை அளித்த பரிந்துரையை ஏற்ற அரசு, கோயிலில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து, கும்பாபிஷேகம் நடத்த ஆயத்தமாக பாலாலய விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அறநிலையத் துறை செய்யாறு சரக ஆய்வா் நடராஜன், செயல் அலுவலா் ஹரிஹரன் ஆகியோா் முன்னிலையில், ஸ்தபதி அன்புக்கரசு தலைமையில் பாலாலய விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் ஆா்.கே.விஸ்வநாதன், ஆ. மோகனவேல் ஏ.என்.சம்பத் மற்றும் பக்தா்கள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் மேலாளா் ஜெகதீசன் மற்றும் அறநிலையத் துறையினா் செய்திருந்தனா்.