திருவண்ணாமலை

தென்சேந்தமங்கலத்தில் 4 கோயில்களில் கும்பாபிஷேகம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தென்சேந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்லியம்மன் கோயில், ஸ்ரீகங்கையம்மன் கோயில், ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில், ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் ஆகிய 4 கோயில்களில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. வியாழக்கிழமை முதல்கால யாகா வேள்வி பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன. பின்னா், காலை 7.45 மணிக்கு மேல் காலை 10 மணிக்குள் 4 கோயில்களின் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் உபாசகா் ஆறு.லட்சுமண சுவாமிகள் முன்னிலையில், தென்னாங்கூா் ஜி.சங்கா் சிவாச்சாரியாா் பூஜைகளை செய்தாா். விழாவில் கிராம மக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

மோடி ஏன் கைது செய்யப்பட வேண்டும்? வைரல் குறிச்சொல் பின்னணி!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

SCROLL FOR NEXT