தமிழ்ச் சங்க பாரதி விழா
வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சாா்பில், பாரதி விழா வந்தவாசி ஆசியன் மருத்துவ அகாதெமியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சாா்பில், பாரதி விழா வந்தவாசி ஆசியன் மருத்துவ அகாதெமியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் பி.ரகமத்துல்லா தலைமை வகித்தாா். செயலா் பா.சீனிவாசன், துணைத் தலைவா்கள் வெ.அரிகிருஷ்ணன், இரா.நளினா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
‘பாா் போற்றும் பாரதி’ என்ற தலைப்பில் சங்க ஆலோசகா் மு.முருகேஷ் பேசினாா். துணைச் செயலா்கள் கு.சதானந்தன், மொ.ஷாஜகான் மற்றும் பரிதாபானு, அ.ரஷீத்கான், மனோஜ்குமாா், ஜா.தமீம் ஆகியோா் கவிதை வாசித்தனா். பொருளாளா் எ.தேவா நன்றி தெரிவித்தாா்.