செய்யாறில் இறந்த மூதாட்டியின் கண்கள் தானம்
செய்யாறில் இறந்த மூதாட்டியின் கண்கள் வியாழக்கிழமை தானமாக அளிக்கப்பட்டது.
செய்யாறில் இறந்த மூதாட்டியின் கண்கள் வியாழக்கிழமை தானமாக அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூர் கிழக்கு மாடவீதி ராமர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் எலக்ட்ரிஷியன் வெங்கடேசன். இவரது தாயார் இலட்சுமி(64). இவர் வியாழக்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்தார்.
இறந்த மூதாட்டியின் கண்களை தானம் அளிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். அதன் பேரில் செய்யாறு நகர லயன்ஸ் சங்கத்தின் உதவியோடு காஞ்சிபுரம் அகரவலால் கண் மருத்துவமனைக் குழுவினர் கண்களை தானமாகப் பெற்றுச் சென்றனர்.
Advertisement
இதற்கான ஏற்பாடுகளை செய்யாறு நகர லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, அன்னை.சண்முகம், டி.மகேஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.