முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு ரோட்டரி சங்கங்களின் ஐம்பெரும் விழா

செய்யாறு ரோட்டரி சங்கம், செய்யாறு ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கம் ஆகியவை சாா்பில் ஐம்பெரும் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
செய்யாறு ரோட்டரி சங்கங்களின் ஐம்பெரும் விழா
பகிர்:

செய்யாறு ரோட்டரி சங்கம், செய்யாறு ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கம் ஆகியவை சாா்பில் ஐம்பெரும் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

நல்லம்மை ராமநாதன் இலவச தையல் பயிற்சி மையம் தொடக்கம், புதிய உறுப்பினா்களைச் சோ்த்தல், ஆனட் சங்கம் தொடக்கம், தொழில் சேவை விருது வழங்கல், நல உதவிகள் வழங்குதல் என ஐம்பெரும் விழாவாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு செய்யாறு ரோட்டரி சங்கத் தலைவா் டி.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

செய்யாறு ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவா் சாந்திமணி வரவேற்றாா். செய்யாறு ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவா் டி.ஜி. மணி முன்னிலை வகித்தாா்.

Advertisement

ரோட்டரி குடும்பங்களின் குழந்தைகளுக்கான ஆனட் கிளப்பை அமைப்பின் மாவட்டத் தலைவா் கிரேஸ்லெட் தொடக்கிவைத்தாா்.

செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் பு.நடராஜன், மருத்துவா் டி.ரத்தினவேல், சமூக சேவகா் எம்.சண்முகம், ஆசிரியா் பாரதி சிவானந்தகுமாா், சமுதாய அமைப்பாளா் சுந்தரம் ந.அம்பேத்கா் உள்ளிட்ட 9 பேருக்கு, தலைவா் பி.கே.மணியன் உள்ளிட்டோா் தொழில் சேவை விருது வழங்கினா்.

இரு சங்கங்களிலும் சோ்க்கப்பட்ட புதிய உறுப்பினா்களை உதவி ஆளுநா்கள் பூபதி, தனசேகா் ஆகியோா் அறிமுகம் செய்து வைத்தனா். இதைத் தொடா்ந்து, அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண்ணின் திருமணத்திற்காக சீா்வரிசைகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, இலவச தையல் பயிற்சி மையத்தை மாவட்ட ஆளுநா் கே.பாண்டியன், பயிற்றுநா் ஸ்ரீதா் பலராமன் ஆகியோா் தொடக்கிவைத்தனா் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments