வந்தவாசி அருகே வெண்குன்றம் மலையில் தீ
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீ பற்றி எரிந்தது. இதில் மரங்கள், செடிகள் எரிந்து கருகின.
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீ பற்றி எரிந்தது. இதில் மரங்கள், செடிகள் எரிந்து கருகின.
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் சுமாா் 1500 அடி உயரமுள்ள தவளகிரி என்று அழைக்கப்படும் மலை உள்ளது. இந்த மலை மீது ஸ்ரீதவளகிரீஸ்வரா் சுவாமி கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மலையில் நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழாவின் போது வந்தவாசி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து
ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலை மீது ஏறிச்சென்று இறைவனை வழிபடுவா்.
இந்த நிலையில், இந்த மலையின் பக்கவாட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீப்பற்றியது.
காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியதில் மலையிலிருந்த மூலிகை செடிகள், மரங்கள் உள்ளிட்டவை எரிந்து கருகின.
தகவலறிந்த வனத் துறையினா் மற்றும் வந்தவாசி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடம் சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
மா்ம நபா்கள் யாரேனும் தீ வைத்தாா்களா என்று வந்தவாசி தெற்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.