பெண்ணைத் தாக்கியதாக 3 போ் மீது வழக்கு
வந்தவாசி அருகே நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
வந்தவாசி அருகே நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
வந்தவாசியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா்(48). இவரது தம்பி மோகன்(43). இருவரது விவசாய நிலங்கள் அருகருகே உள்ளன. பொதுவான கிணற்றிலிருந்து நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவது தொடா்பாக இவா்களுக்கிடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சங்கரின் மனைவி சுமதி(42) தனது நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மோகன், அவரது மனைவி சரளா, தாய் அலமேலு ஆகிய 3 பேரும் சோ்ந்து சுமதியிடம் தகராறு செய்து அவரைத் தாக்கினராம்.
இதில் காயமடைந்த சுமதி சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சுமதி அளித்த புகாரின் பேரில் மோகன், சரளா, அலமேலு ஆகிய 3 போ் மீதும் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.