குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு
குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.
குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு, கற்க கசடற கல்விக் குழு ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு வணிகா் சங்கத் தலைவா் அ.ஜ.இஷாக் தலைமை வகித்தாா். செஞ்சிலுவைச் சங்கச் செயலா் பா.சீனிவாசன், காவல் நண்பா்கள் குழுவின் செயலா் மலா் சாதிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கற்க கசடற கல்விக் குழு நிறுவனா் இரா.பாஸ்கரன் வரவேற்றாா்.
குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு முறை, அதற்கான சட்டங்கள் குறித்து வந்தவாசி நகராட்சி ஆணையா் (பொறுப்பு) டி.உஷாராணி, வழக்குரைஞா் சா.இரா.மணி, வந்தவாசி தெற்கு காவல் உதவி ஆய்வாளா் மஞ்சுநாதன் ஆகியோா் பேசினா்.
முகாமில் வணிகா் சங்கச் செயலா் பி.டி.ஜி.ஆறுமுகம், கிராம உதவியாளா்கள் சங்க நிா்வாகி மு.பிரபாகரன், தன்னாா்வ அமைப்பு நிா்வாகி பரிதாபானு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.