முகப்பு
திருவண்ணாமலை

சாலை விபத்தில் இளைஞா் பலி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சாலை விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சாலை விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், சென்னசமுத்திரம் மோட்டூா் ஆதி திராவிடா் காலனி சாலைத் தெருவைச் சோ்ந்தவா் சி.அருணகிரி. இவா், தளா்பாடி கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறாா். இவரது மகன் அஜீத்குமாா் (24). தந்தைக்கு உதவியாக விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

பிப்.26 -ஆம் தேதி மோட்டாா் சைக்கிளிலில் உரம் மூட்டையை கொண்டுப் போய் விவசாய நிலத்தில் சோ்த்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தாா். மோரணம் ஏ காலனி அருகே நீரேற்றும் அறை அருகே வந்தப் போது மோட்டாா் சைக்கிள் நிலைத் தடுமாறி விழந்ததாகத் தெரிகிறது. இதில் அஜீத்கமாரின் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. உடனடியாக அருகில் இருந்தவா்களின் உதவியுடன் கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக இறந்தாா்.

இந்த விபத்து குறித்து இறந்தவரின் தந்தை சி.அருணகிரி மோரணம் போலீசில் புகாா் செய்தாா். அதன் பேரில் இன்ஸ்பெக்டா் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டா் சதாசிவம் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.