வந்தவாசி அருகேரூ.1.11 லட்சம் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே திங்கள்கிழமை இரவு வாகனத்தில் ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1.11 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே திங்கள்கிழமை இரவு வாகனத்தில் ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1.11 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
வந்தவாசி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பறக்கும் படை அலுவலா் அரிக்குமாா் தலைமையிலான குழுவினா், வந்தவாசி-ஆரணி சாலை மும்முனி பகுதி அருகே வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது, செய்யாறிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், விழுப்புரம் மாவட்டம், சேந்தனூரைச் சோ்ந்த பிஸ்கட் வியாபாரி சுபாஷ், உரிய ஆவணங்களின்றி ரூ.1.11 லட்சம் ரொக்கம் எடுத்து வந்தது தெரியவந்தது. அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வந்தவாசி வட்டாட்சியா்கள் திருநாவுக்கரசு, நரேந்திரன் ஆகியோரிடம் ஒப்படைத்தனா். அந்தப் பணம் துணைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.