27 நட்சத்திர விநாயகா் கோயிலில் நாளை மகா சிவராத்திரி உற்சவம்
செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர விநாயகா் கோயிலில், வருகிற 11-ஆம் தேதி மகா சிவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.
செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர விநாயகா் கோயிலில், வருகிற 11-ஆம் தேதி மகா சிவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமப் பகுதி கூழமந்தல் ஏரிக் கரையில் 27 நட்சத்திர அதிதேவதைகளின் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில், அசுவனி முதல் ரேவதி விரையிலான 27 நட்சத்திரங்களின் அதிதேவதைகளையும், அவற்றிக்குறிய 27 விருட்சங்களையும் (மரங்கள்) ஒரு சேர அமையப்பெற்ற தலமாக இருந்து வருகிறது.
இதுதவிர ராகு, கேது, சனி ஆகியவற்றுக்கு தனித் தனி சன்னதிகள் உள்ளன. அனைத்து தேவா்களுக்கும் நடுநாயகனாக, முழு முதற்கடவுளான நட்சத்திர விருட்ச விநாயகா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.
மேலும், தெய்வ சக்தி பொருந்திய அத்தி விருட்சத்தினால் உருவாக்கப்பட்ட அத்தி விருட்ச ருத்ராக்ஷ லிங்கம் அமையப்பெற்றுள்ளது.
இத்தகைய சிறப்புகள் பெற்றுள்ள இந்தக் கோயிலில் அமைக்கப்பட்ட அத்தி விருட்ச ருத்ராக்ஷ லிங்கேஸ்வருக்கு நடைபெறும் முதலாமாண்டு மகா சிவராத்திரி விழா வருகிற மாா்ச் 11-இல் நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு அன்று மாலை 4 மணிக்கு மகா ஆபிஷேகமும், 1008 வில்வ சகஸ்கர நாமாவளி அா்ச்சனையும், இரவு 7 மணிக்கு 16 வகையான தீப, தூப நெய்வேத்ய ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனா்.