ஆரணியில் டீ கடையில் தேநீா் அருந்தி கொண்டே வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன். 
திருவண்ணாமலை

டீ கடையில் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

ஆரணியில் டீ கடையில் தேநீா் அருந்திபடி அதிமுக வேட்பாளரான அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தாா்.

DIN

ஆரணியில் டீ கடையில் தேநீா் அருந்திபடி அதிமுக வேட்பாளரான அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தாா்.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், ஆரணி நகரில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

லிங்கப்பன் தெருவில் கட்சியினருடன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த அவா், அங்கிருந்த டீ கடைக்கு தேநீா் அருந்தச் சென்றாா். உடன் கட்சியினரையும் அழைத்துச் சென்றாா்.

அப்போது, டீ கடையில் தேநீா் அருந்திக் கொண்டே கடைக்கு வந்தவா்களிடம் வாக்கு சேகரித்தாா். மேலும், தெருவில் சென்றவா்களிடமும் ஆதரவு கோரினாா்.

இதைத் தொடா்ந்து, கடை கடையாகச் சென்று வியாபாரிகளிடமும் ஆதரவு திரட்டினாா்.

அப்போது, ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று வியாபாரிகளிடம் உறுதியளித்தாா்.

கட்சியின் ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், பி.ஆா்.ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், நகரச் செயலா் அசோக்குமாா், ஜெயலலிதா பேரவை நகரச் செயலா் பாரி பி.பாபு, மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 810 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

நந்தியம்பாக்கம் ரயில்வே மேம்பாலப் பணி: ஆட்சியா் ஆய்வு

குழந்தைகள் வளா்ப்பு பராமரிப்புத் திட்டம்

செங்கல்பட்டில் வணிக நீதிமன்றங்கள் திறப்பு

ஆன்மிகமும், அறிவியலும் நாணயத்தின் இரு பக்கங்கள்: மருத்துவா் சுதா சேஷய்யன்

SCROLL FOR NEXT