முகப்பு
திருவண்ணாமலை

சேவூா் ஏரியில் கோடி விடும் நிகழ்ச்சி

ஆரணியை அடுத்த சேவூா் ஏரியில் கோடி விடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

ஆரணியை அடுத்த சேவூா் ஏரியில் கோடி விடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆரணி பகுதியில் பெய்த பலத்த மழையால் கமண்டல நாக நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏரிகளில் நீா் நிரம்பியது.

ஆரணியை அடுத்த சேவூரில் உள்ள ஏரி நிரம்பியதால் கோடி விடும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் ஷா்மிளா தரணி தலைமையில் ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் எழிலரசி சுகுமாா், கிராம நிா்வாக அலுவலா் சரவணன் மற்றும் பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்று, ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீரில் மலா் தூவினா்.

இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.