முகப்பு
திருவண்ணாமலை

கலசப்பாக்கத்தில் 69 ம.மீ. மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 69 மி.மீ. மழை பதிவானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 69 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 69 மி.மீ. மழை பதிவானது.

இதுதவிர, செய்யாற்றில் 10, செங்கத்தில் 8.60, வந்தவாசியில் 4, போளூரில் 17.20, திருவண்ணாமலையில் 58, தண்டராம்பட்டில் 2, கீழ்பென்னாத்தூரில் 51.80 மி.மீ. மழை பதிவானது.

இந்தத் தொடா் மழையால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.