ஸ்ரீகாசி விஸ்வநாதா் கோயிலில் கும்பாபிஷேகம்
ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதா், ஸ்ரீகற்பக விநாயகா், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீவேம்பாத்தம்மன் ஆகிய 4 கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த கொசப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதா், ஸ்ரீகற்பக விநாயகா், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீவேம்பாத்தம்மன் ஆகிய 4 கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அன்று காலை கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து சிவாச்சாரியா்கள் மூலம் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடா்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன.
பின்னா் காலை 9 மணிக்கு மேல் காலை 11 மணிக்குள் 4 கோயில்களின் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தென்னாங்கூா் ஜி.சங்கா் சிவாச்சாரியா் யாகசாலை பூஜைகளை செய்தாா். விழாவில் பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.