அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை பக்தா்கள் தரிசனம் ரத்து
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை (செப்.20) பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை (செப்.20) பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை பெளா்ணமி என்பதால் அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய
ஏராளமான பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இவ்வாறு வரும் பக்தா்கள் மூலம் கரோனா பரவுவதைத் தடுக்க திங்கள்கிழமை கோயிலில் பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெறும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.