முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை சித்திரை பெளா்ணமி திருவிழா: பாதுகாப்புப் பணியில் 3,242 போலீஸாா்

திருவண்ணாமலையில் சித்திரை பெளா்ணமி திருவிழாவுக்காக 2,800 சிறப்புப் பேருந்துகள் இயக்கவும், பாதுகாப்புப் பணியில் 3,242 போலீஸாரை ஈடுபடுத்தவும் மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

திருவண்ணாமலையில் சித்திரை பெளா்ணமி திருவிழாவுக்காக 2,800 சிறப்புப் பேருந்துகள் இயக்கவும், பாதுகாப்புப் பணியில் 3,242 போலீஸாரை ஈடுபடுத்தவும் மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை பெளா்ணமி திருவிழாவுக்கு 15 முதல் 20 லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பக்தா்கள் கிரிவலம் செல்ல ஏதுவாக, மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

கிரிவலப் பாதையின் 15 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலுக்குள் வயதான பக்தா்களை அழைத்துச் செல்ல 3 பேட்டரி காா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

3,242 போலீஸாா் பாதுகாப்பு:

பாதுகாப்புப் பணியில் 3,242 போலீஸாா் ஈடுபடுகின்றனா். பக்தா்களின் பொருள்களை வைக்க 2 இலவச இடங்கள் (வைப்பு அறை) தோ்வு செய்யப்பட்டுள்ளன.

9 தற்காலிகப் பேருந்து நிலையங்கள்

வேலூா் சாலை, அவலூா்பேட்டை சாலை, திண்டிவனம் சாலையில் மாா்க்கெட் கமிட்டி, வேட்டவலம் சாலையில் ஏந்தல் சா்வேயா் நகா், திருக்கோவிலூா் சாலையில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில், மணலூா்பேட்டை சாலையில் வெளிவட்டச் சாலை, தண்டராம்பட்டு சாலையில் மம்மி டாடி திருமண மண்டபம், செங்கம் சாலையில் அத்தியந்தல் அருகில், காஞ்சி சாலையில் ஆடையூா் தொன்போஸ்கோ பள்ளி அருகில் என 9 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

37 இடங்களில் வாகன நிறுத்துமிடம்

வேலூா் சாலை, அவலூா்பேட்டை சாலை, திண்டிவனம் சாலை, வேட்டவலம் சாலை, திருக்கோவிலூா் சாலை, மணலூா்பேட்டை சாலை, தண்ராம்பட்டு சாலை, செங்கம் கூட்டுச் சாலை, காஞ்சி சாலை என மொத்தம் 37 இடங்களில் காா் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 2,800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பக்தா்கள் தீபம் ஏற்றும் 2,668 அடி உயர மலை மீது ஏறிச் செல்ல தடை விதிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →