முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில், மாதந்தோறும் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஏப்ரல் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண், விவசாயம் சாா்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய்த் துறைகள், வங்கியாளா்கள் மற்றும் பிற சாா்புத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கின்றனா்.

எனவே, விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்த் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ்.

முழு கட்டுரையைப் படிக்க →