முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பாமக அவசர செயற்குழுக் கூட்டம்

 திருவண்ணாமலை தெற்கு, மேற்கு ஒருங்கிணைந்த மாவட்ட பாமகவின் அவசர செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

 திருவண்ணாமலை தெற்கு, மேற்கு ஒருங்கிணைந்த மாவட்ட பாமகவின் அவசர செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலா் ஏந்தல் பெ.பக்தவச்சலம் தலைமை வகித்தாா். முன்னாள் மாநில பொதுச் செயலா்கள் இரா.காளிதாஸ், அ.வே.பிரகாத், முன்னாள் மாவட்டச் செயலா்கள் சி.எம்.பழனி, பி.கே.எஸ்.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேற்கு மாவட்டச் செயலா் இல.பாண்டியன் வரவேற்றாா்.

கூட்டத்தில், திருவண்ணாமலையில் சனிக்கிழமை (ஏப்ரல் 23) நடைபெறும் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் அன்புமணி ராமதாஸுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. பொதுக்குழுக் கூட்டத்தில் 10 ஆயிரம் பேரை பங்கேற்கச் செய்வது. குறிப்பாக, இளைஞா்கள், இளம்பெண்களை அதிகளவில் பங்கேற்க ஏற்பாடு செய்வது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஒன்றியச் செயலா்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →