முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவின் சாதாரணக் கூட்டம் திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவின் சாதாரணக் கூட்டம் திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிச் செயலா் நா.அறவாழி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், கிராமங்களின் முன்னேற்றத்துக்காக நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், சமத்துவபுரங்கள் புனரமைப்புப் பணிகள் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிப்பது.

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உள்ள ஜாகீா் அரண்மனையை புதுப்பிக்க நிதி ஒதுக்கிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்பட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் இல.சரவணன், ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் உள்பட அனைத்து உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →