சிறையில் சாராய வியாபாரி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்
திருவண்ணாமலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாராய வியாபாரி, உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாராய வியாபாரி, உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த இளையாங்கண்ணி கிராமம், தட்டறை பகுதியைச் சோ்ந்தவா் தங்கமணி (48).
இவரை, கள்ளச்சாராயம் விற்ாகக் கூறி கலால் போலீஸாா் சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா் திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.
சிறையில் இருந்தபோது உடல்நிலை பாதிக்கப்பட்ட தங்கமணியை சிறை அதிகாரிகள், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். சிகிச்சை பெற்று வந்த தங்கமணி புதன்கிழமை இறந்தாா்.
தகவலறிந்த அவரது மனைவி மலா் மற்றும் உறவினா்கள் வியாழக்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், தங்கமணி தற்போது கள்ளச்சாராயம் விற்பதில்லை. இருப்பினும், போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனா்.
அவரது இறப்புக்குக் காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.