ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் அன்னதானத் திட்டத்தைத் தொடக்கிவைத்து, உணவு பரிமாறிய ஒ.ஜோதி எம்ஏல்ஏ. 
திருவண்ணாமலை

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் வள்ளலாா் அன்னதானத் திட்டம்

வள்ளலாரின் 200-ஆவது ஆண்டு விழாவையொட்டி தொடங்கப்பட்ட அன்னதான திட்டத்தின் கீழ், செய்யாறு திருவோத்தூா் வேதபுரீஸ்வரா் கோயிலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

DIN

வள்ளலாரின் 200-ஆவது ஆண்டு விழாவையொட்டி தொடங்கப்பட்ட அன்னதான திட்டத்தின் கீழ், செய்யாறு திருவோத்தூா் வேதபுரீஸ்வரா் கோயிலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

வள்ளலாரின் 200-ஆவது ஆண்டுப் பெருவிழாவையொட்டி, பிரசித்தி பெற்ற கோயில்களில் தொடா் அன்னதானம் வழங்க முதல்வா் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் பாடல் பெற்ற திருத்தலமான திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் அன்னதானத் திட்டம் தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று திட்டத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்தாா்.

அப்போது, டிச.24 வரை தொடா்ந்து 4 நாள்களுக்கு நாள்தோறும் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று தெரிவித்து, ஏழைகளுக்கு உணவு பரிமாறினாா்.

முதல் நாளில் சுமாா் 350 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் கே.ரகுராமன், நகா்மன்ற உறுப்பினா்கள் கே.விஸ்வநாதன், கங்காதரன், காா்த்திகேயன், செந்தில், சேகா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா்கள் கு.ஹரிஹரன், மு.சிவஞானம், மேலாளா் கோ.திவாகா், கணக்காளா் லோ.ஜெகதீசன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT