வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
திருவத்திபுரம் நகராட்சித் தோ்தலுக்காக வரவழைக்கப்பட்ட 48 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைத்து, அறைக்கு ‘சீல்’ வைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
திருவத்திபுரம் நகராட்சித் தோ்தலுக்காக வரவழைக்கப்பட்ட 48 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைத்து, அறைக்கு ‘சீல்’ வைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் இருந்து நகராட்சி, பேரூராட்சிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன.
அதன்படி, திருவத்திபுரம் நகராட்சியில் 27 வாா்டுகளில் உள்ள 32,514 வாக்காளா்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள 40 வாக்குச்சாவடிகளுக்கு தலா ஒரு இயந்திரம் வீதம்
40 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், கூடுதலாக (பழுது ஏற்படும்பட்சத்தில்) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 என மொத்தம் 48 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன.
இந்த 48 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்புப் பெட்டக அறையில் வைக்கப்பட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா் ரகுராமன் முன்னிலையில் அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
மேலும் அந்த அறைக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.