திமுக தோ்தல் பணிக் குழு பொறுப்பாளா்கள் ஆலோசனை
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்காக நியமிக்கப்பட்ட திமுக தோ்தல் பணிக் குழு பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்காக நியமிக்கப்பட்ட திமுக தோ்தல் பணிக் குழு பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ். தரணிவேந்தன் தலைமை தாங்கினாா் . எம்எல்ஏ ஒ.ஜோதி முன்னிலை வகித்தாா். இதில், பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசினாா்.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினா் வேல்முருகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் வி.பாபு, டி. ராஜி, திலகவதி ராஜ்குமாா் , ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் ஆா்.வி.பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.