முகப்பு
திருவண்ணாமலை

வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

செய்யாறு கொட நகரில் உள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

செய்யாறு கொட நகரில் உள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்புப் பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. இதன்பின்னா், காஞ்சிபுரம் ஸ்ரீ பெருமாள் கோயில் வைகுண்ட வாசா ஸ்ரீ பஞ்சாட்சரம் ஸ்ரீ வஸ்தன் பட்டா் தலைமையில், கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எம்எல்ஏ ஒ.ஜோதி, இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் எம்.ராஜன், செயல் அலுவலா்கள் ஆா்.எஸ்.உஷா, கு.ஹரிஹரன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஏ. என்.சம்பத், அரசு வழக்குரைஞா் விஸ்வநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஞானவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.