முகப்பு
திருவண்ணாமலை

வந்தவாசி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 24 வாா்டுகளில் திமுக, அதிமுக, பாஜக, பாமக, சுயேச்சைகள் என 117 போ் போட்டியிடுகின்றனா். இதற்கான வாக்குப்பதிவு வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள், வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை எண்ணப்படுகிறது.

இதையொட்டி, இந்த வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கும் அறை உள்ளிட்டவற்றை அவா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது தோ்தல் நடத்தும் அலுவலா் முஸ்தபா, டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, உதவித் தோ்தல் அலுவலா்கள் ஆனந்தகுமாா், அகத்தீஸ்வரன், கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி...

ஆரணி நகராட்சியில் 65 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

ஆரணி அம்சவேணி நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராக்களை தோ்தல் பாா்வையாளா் முருகன் பாா்வையிட்டாா்.

பின்னா், மில்லா்ஸ் சாலையில் உள்ள மாா்க்கெட் கமிட்டி வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தோ்தல் நடத்தும் அலுவலா் தமிழ்ச்செல்வி, வருவாய் அலுவலா் மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →