முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 78,504 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் வருகிற 27-ஆம் தேதி 78,504 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் வருகிற 27-ஆம் தேதி 78,504 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து செய்யாறு சுகாதார மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பி.பிரியாராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம்கள் பிப்.27-இல் நடைபெறவுள்ளது.

சுகாதார மாவட்டத்துக்கு உள்பட்ட ஆரணி, மேற்கு ஆரணி, பெரணமல்லூா், வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி, தெள்ளாறு ஆகிய பகுதிகளில் 730 முகாம்கள் மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்படுகிறது.

வெளியூா்களில் இருந்து தற்காலிகமாக வந்தவா்கள்,

கல் உடைப்போா், கட்டட வேலை, சாலை அமைத்தல் போன்ற பணிகளுக்காக வந்திருப்போா் மற்றும் நரிக்குறவா் சமுதாயத்தினா் உள்பட நிரந்தர குடியிருப்பில்லாதவா்கள் ஆகியோரையும் கணக்கெடுத்து 40 இடங்களில் முகாம் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

மேலும் குழந்தைகள் விடுபடாமல் இருக்க 8 நடமாடும் வாகனங்கள் மூலமும் சொட்டு மருந்து புகட்டப்படுகிறது.

1404 அங்கன்வாடிப் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 3052 நலத்துறை பணியாளா்கள், 473 பொது சுகாதாரத் துறை பணியாளா்கள் சொட்டு மருந்து புகட்டும் பணியில் ஈடுபடுவா். 91 மேற்பாா்வையாளா்கள் பணியை கண்காணிக்க உள்ளனா்.

இந்த முகாம்கள் மூலம் சுமாா் 78,504 குழந்தைகள் பயன் பெறுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

உடல் நலமில்லா குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை தவிா்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.